திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By papiksha
Last Updated : செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (11:17 IST)

ட்ரெண்டிங்கில் ராஷ்மிகா மந்தனாவின் "பீஷ்மா" ட்ரைலர்!

தெலுங்கு சினிமாவின் தற்போதைய ஸ்டார் நடிகையாக பார்க்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா. சாலோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி முதல் படத்திலேயே அக்கட தேசத்து ரசிகர்களின் பேவரைட் நடிகையானார். 
 
அதையடுத்து விஜய் தேவராகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் படம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் வளைத்து போட்டது. அந்த படத்தில் இடம்பெற்ற இன்கி மின்கி என்ற ஓரே ஒரு பாடல் மொழி தெரியாத ரசிகர்களின் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்களில் வலம் வந்தது. ராஷ்மிகாக நேரடியாக இதுவரை எந்த ஒரு தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை என்றாலும் தமிழ் ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக பார்க்கப்படுகிறார். தற்போது நடிகர் கார்த்தியுடன் சுல்தான் என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது பீஷ்மா என்ற தெலுங்கு படத்தில் ராஷ்மிகா நடித்து வருகிறார். நிதின் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை வெங்கி குடுமுலா  இயக்கியுள்ளார். மகாதி ஸ்வாரா சாகர்
இசையமைக்கும் இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி ட்ரெண்டிங்கில் 3வது இடத்தை பெற்று நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.