ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By
Last Modified: ஞாயிறு, 2 பிப்ரவரி 2020 (15:48 IST)

ஒரே நேரத்தில் விஜய், சூர்யாவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 65ஆவது திரைப்படமான ’தளபதி 65’ திரைப்படத்தின் இயக்குனர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் இந்த படத்தை தயாரிக்க இருக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா தான் என்பதை உறுதி செய்து விட்டதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் விஜய்யின் 65வது படத்தில் நடிக்க இருக்கும் ராஷ்மிகா மந்தனா, தற்போது சூர்யாவின் அடுத்த படத்திலும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சூர்யா நடிப்பில் ஹரி இயக்க உள்ள அடுத்த  படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கியிருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்க முதலில் மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது என்றும் ஆனால் தற்போது திடீர் திருப்பமாக ராஷ்மிகா மந்தனாவிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
 
ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த ’சுல்தான்’ என்ற படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் தற்போது சூர்யாவின் அடுத்த படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
விஜய், சூர்யா ஆகிய இருவர் படத்தில் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டால் ஒரே நேரத்தில் விஜய் மற்றும் சூர்யாவுடன் நடிக்கும் பிரபல நடிகை என்ற பெயர் அவருக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது