1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 17 பிப்ரவரி 2020 (21:16 IST)

தளபதி விஜய் நண்பனா? காதலனா? கணவனா? பிரபல நடிகை பேட்டி

பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே. இவர் ஏற்கனவே விஜய் நடித்துவரும் ’மாஸ்டர்’ படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் ஒரு சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை என்றும் இதனை அடுத்து மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ராஷ்மிகா நடித்து முடித்துள்ள தெலுங்கு திரைப்படம் ஒன்று அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடந்தபோது அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. உங்களுக்கு நண்பராக, காதலராக, கணவராக எந்த நடிகர் பொருத்தமாக இருப்பார் என்று கேள்வி கேட்கப்பட்டது
 
இந்த கேள்விக்கு பதிலளித்த ராஷ்மிகா மந்தனா, ‘தனக்கு நண்பராக நடிகர் நிதின் பொருத்தமாக இருப்பார் என்று கூறினார். மேலும் விஜய் தனக்கு காதலராக பொருத்தமாக இருப்பார் என்றும் தெரிவித்தார். மேலும் கணவராக எந்த நடிகர் பொருத்தமாக இருப்பார் என்பதற்கு தான் பதில் சொல்ல விரும்பவில்லை என்று கூறிவிட்டார். அதுமட்டுமின்றி தான் திருமணம் செய்தால் ஒரு தமிழ் நடிகரை தான் திருமணம் செய்ய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார் 
 
விஜய்யை மானசீக காதலனாக ஏற்றுக்கொண்ட ராஸ்மிகா மந்தனா, விரைவில் அவர் நடிக்கும் திரைப்படத்தில் அவரது காதலராக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது