ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (11:12 IST)

நான் ஒரு புத்தகம் எழுதுவேன்… அதில் எல்லோரும் சமம்னு எழுதுவேன் – ஜி தொலைக்காட்சியில் அம்பேத்கர் வாழக்கை வரலாறு!

இந்தியாவின் தன்னிகரற்ற தலைவர்களுள் ஒருவரான அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை ஜி தொலைக்காட்சி தொடராக தயாரித்துள்ளது.

இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய சட்டமேதை அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று தொடர் அம்பேத்கர் என்ற பெயரில் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் அந்த தொடரின் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சமூகவலைதளங்களில் தங்கள் மகிழ்ச்சியை பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள குழந்தையாக இருக்கும் அம்பேத்கர் ‘நான் ஒரு புத்தகம் எழுதுவேன். அதில் எல்லோரும் சமம்னு எழுதுவேன் ‘ என்ற வசனமும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.