திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (11:34 IST)

பிரபல தமிழ் நடிகை கைது: போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்பா?

பிரபல தமிழ் நடிகை கைது: போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்பா?
கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது என்பது தெரிந்ததே. குறிப்பாக நடிகை ராகினி திவேதிக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகவும் இது குறித்து அவரிடம் விசாரணை செய்ய போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பியதாகவும் தகவல்கள் வெளிவந்தன
 
இந்த நிலையில் கன்னட நடிகை ராகினி திவேதி வீட்டில் திடீரென போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனை தொடர்ந்து ராகினி திவேதி கைது செய்யப்பட்டதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் இறக்குமதி செய்து பல திரையுலக பிரபலங்களுக்கு அவர் போதைப்பொருள் சப்ளை செய்ததும் தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஜெயம் ரவி நடித்த ‘நிமிர்ந்து நில்’ உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் மலையாள், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடிகை ராகினி திவேதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.