சனி, 20 செப்டம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 25 ஜனவரி 2019 (21:53 IST)

யோகிபாபுவுடன் நடனம் ஆடும் யாஷிகா!

யோகிபாபுவுடன் நடனம் ஆடும் யாஷிகா!
கோலிவுட் திரையுலகில் முன்னணி  நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக உள்ளார் யோகிபாபு . சமீபத்தில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிஸியாக உள்ளார். இந்த நிலையில் தற்போது யோகிபாபு இரண்டு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
 
யோகிபாபு ஹீரோவாக ஹீரோவாக நடித்து வரும் படங்களில் ஒன்று ' தர்மபிரபு ' . தற்போது இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. . மேலும் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் திங்கட்கிழமை தொடங்க உள்ளதாகவும் இந்த படப்பிடிப்பில் யோகிபாபுவும் யாஷிகாவும் பாடல் ஒன்றில் நடனம் ஆடவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 
 
யோகிபாபுவுடன் நடனம் ஆடும் யாஷிகா!
இந்த படத்தை முத்துக்குமரன் இயக்கியுள்ளார் . ஜஸ்டின் பிரபாகரன் படத்திற்கு இசையமைக்கிறார். மகேஷ் முத்துஸ்வாமி ஒளிப்பதிவாளராகவும் ஷான் லோகேஷ் படத்தொகுப்பாளராகவும் உள்ளனர். இந்த படத்தில் யோகி பாபு நடிப்பதோடு வசனமும் எழுதுகிறார்
 
அதேபோல் யோகிபாபு ஹீரோவாக நடித்து வரும் 'ஜோம்பி' என்ற படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.