யோகிபாபுவை அடுத்த 'தளபதி 63' படத்தில் இன்னொரு பிரபல காமெடி நடிகர்

Last Modified திங்கள், 14 ஜனவரி 2019 (18:27 IST)
ஒருபக்கம் பொங்கல் படங்களான 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' திரைப்படங்கள் மாஸ் செய்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் 'தளபதி 63' படத்தின் அப்டேட்டுக்கள் தினமும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் 'பரியேறும் பெருமாள் 'கதிர்'', யோகிபாபு மற்றும் ரோபோ சங்கரின் மகள் ஆகியோர் சமீபத்தில் இணைந்த செய்தி இணையதளங்களில் வைரலாகியது தெரிந்ததே

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் புதிய அப்டேட்டை படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வெளிவந்துள்ளது. அதாவது இந்த படத்தில் தற்போது நடிகர் விவேக் இணைந்துள்ளார். இதனை ஏஜிஎஸ் சி.இ.ஓ அர்ச்சனா கல்பாதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.


இந்த படத்தில் யோகிபாபு, விவேக் ஆகிய இரண்டு முன்னணி காமெடி நடிகர்கள் இருப்பதால் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே கருதப்படுகிறது.

விஜய், நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இந்த படம் வரும் 2019ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வேளியாகவுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :