புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 14 ஜனவரி 2019 (08:03 IST)

மாணவர்களுக்காக செய்த காரியத்தால் சிக்கலில் சிக்கிய யாஷிகா!!

மாணவர்களை பார்த்த சந்தோஷத்தில் யாஷிகா செய்த காரியம் கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடித்து பிரபலமானவர் தான் யாஷிகா. இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். 
இந்நிலையில் சமீபத்தில் தீம் பார்க்கிற்கு சென்ற யாஷிகாவிடம் அங்கிருந்த மாணவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அத்தோடு நிறுத்தாமல் யாஷிகாவிடம் 200 ரூபாய் தாளில் கையெழுத்தையும் வாங்கியுள்ளனர். ரூபாய் நோட்டில் கையெழுத்து போடுவது குற்றம். இதுகூட யாஷிகாவிற்கு தெரியாதா என பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.