தளபதி 63 படத்தில் 'சர்கார்' பட காமெடி நடிகர்

Last Modified ஞாயிறு, 13 ஜனவரி 2019 (19:51 IST)
விஜய் நடிக்கவுள்ள 'தளபதி 63' படம் குறித்த செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த படத்தில் 'பரியேறும் பெருமாள்' பட நடிகர் கதிர் மற்றும் ரோபோசங்கர் மகள் ஆகியோர் சமீபத்தில் இணைந்ததாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல காமெடி நடிகர் இணைந்த செய்தி வெளிவந்துள்ளது.

அவர்தான் யோகிபாபு. தளபதி விஜய்யின் முந்தைய படமான 'சர்கார்' படத்தில் நடித்த யோகிபாபு இந்த படத்திலும் இணைந்துள்ளார். இந்த படத்தில் இணைவதன் மூலம் விஜய்யுடன் அவர் நான்காவது முறையாக இணைகின்றார் என்பதும் இதற்கு முன் வேலாயுதம் , மெர்சல் , சர்க்கார் ஆகிய படங்களில் யோகிபாபு நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கி இவ்வருட தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :