செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 23 அக்டோபர் 2021 (15:27 IST)

மண்டேலா படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்த யோகி பாபு!

யோகி பாபு மற்றும் ஷீலா நடித்துள்ள மண்டேலா திரைப்படம் ஆஸ்கருக்கு செல்ல பரிந்துரைப் பட்டியலில் உள்ளது.

யோகி பாபு மற்றும் ஷீலா நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மண்டேலா என்ற திரைப்படம் கடந்த ஆண்டு நெட்பிளிக்ஸ் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியானது. நல்ல விமர்சனங்களை பெற்ற அந்த படம் இப்போது இந்தியாவின் சார்பாக ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப் படும் படங்களின் பட்டியலில் உள்ளது.

இப்போது வரை 14 படங்கள் அந்த பட்டியலில் உள்ளன. இதில் இருந்து ஒரு படம் மட்டும் தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கருக்கு அனுப்பப்படும். இந்நிலையில் மண்டேலா படக்குழுவினர் தான் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ள யோகி பாபு ‘மண்டேலா படக்குழுவினருக்கு நன்றி’ எனக் கூறியுள்ளார்.