1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 22 அக்டோபர் 2021 (23:11 IST)

விற்றுத் தீர்ந்த சிறப்பு தரிசன டிக்கெட்டுகள்

கொரொனா கால ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் திருப்பதி சுவாமி தரிசனத்திற்கு இலவச தரிசனத்திற்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

அக்டோபர் மாதம் 22, 23 ஆம் தேதி நவம்பர் மாதத்திற்கான ரூ.300 தரிசன  டிக்கெட்டுகள் மற்றும் இலவச தரிசன டோக்கன் ஆன்லையின் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

எனவே பக்தர்கள், https:/tirupatibalaji.ap.gop.in gop.in என்ற இணையதளம் மூலம் டிக்கெட்டுகள் மற்றும் டோக்கன் முன்பதி செய்யலாம் என்று அறிவித்துள்ளது.

இன்று  ஆன்லைனில் புக்கிங் தொடங்கப்பட்ட டிக்கெட் விற்பனை சீக்கிரமே விற்றுத் தீர்ந்தன. குறிப்பான நவம்பர். டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 கான டிக்கெட் விற்றுத் தீர்ந்தன.  எனவே வரும் 2022 ஆம் ஆண்டுதான் சிறப்பு கட்டண தரிசன டோக்கன் மூலம் சுவாமியை தரிசனம் செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது.