செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (12:27 IST)

பீஸ்ட் படத்தில் யோகிபாபு… முதல் முறையாக வெளியான ஷூட்டிங் ஸ்பார் போட்டோ!

பீஸ்ட் படத்தில் யோகி பாபு நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும் இதுவரை அவர் புகைப்படம் எதுவுமே வெளியாகவில்லை.

விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏபரல் 14 புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 13 ஆம் தேதி ரிலிஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பீஸ்ட் படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ஹிட்டாகியுள்ளன. அடுத்த கட்டமாக டீசர் மற்றும் டிரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். ஆந்த ஆர்வத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக நேற்று பீஸ்ட் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 2 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது படக்குழுவினர் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் இருக்கின்றனர். மேலும் முதல் முறையாக இந்த புகைப்படத்தில்தான் யோகி பாபு இடம்பெற்றிருக்கிறார். இதுவரை பீஸ்ட் சம்மந்தமாக வெளியான எந்த ஒரு புகைப்படத்திலும் அவர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.