யோகி பாபுவுக்கு பிறகு சிம்புவுடன் இணைந்த மற்றொரு பிரபல காமெடி நடிகர்
மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படம் பெரும் ஹிட்டான பிறகு நடிகர்சிம்பு, சுந்தர் சி இயக்கத்தில் பிஸியாக நடித்து வருகிறார். தெலுங்கில்2013ம் ஆண்டு பவன் கல்யாண் நடிப்பில் மெகா ஹிட்டான அத்திரண்டிகி தாரேதி படத்தைதான் சுந்தர் சி தமிழில் ரீமேக் செய்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில்,ஷுட்டிங் நடந்து வருகிறது. சிம்பு- சுந்தர் சியின் கூட்டணியில் பெயரிடப்படாதஇந்த படத்தில் கேத்ரீனா தெரசா, மேகா ஆகாஷ், ஆகிய இரண்டு கதாநாயகிகள்நடிக்கிறார்கள். ரம்யா கிருஷ்ணன், மகத், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில்நடித்து வருகிறார்கள்.
சுந்தர் சி ஷுட்டிங் நடத்தி வரும் ஹைதராபாத்தின் ராமோஜி பிலிம் சிட்டியில்தான் விஸ்வாசம் படத்தின் ஷுட்டிங்கும் நடந்து வருகிறது.
இந்நிலையில் விஸ்வாசம் படத்தில் நடித்து வரும் டாப் காமெடி நடிகர்களில்ஒருவரான ரோபோ சங்கர் சுந்தர் சி படத்தில் இணைந்துள்ளார். ஆதி இசையில் .குடும்பமற்றும் பொழுதுபோக்கு படமாக உருவாகி வருகிறது.