1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 18 அக்டோபர் 2018 (13:20 IST)

மீண்டும் புதிய படத்தில் இணையும் கெளதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரகுமான்

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், சிம்பு மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 
திரையுலகில் சிலரது கூட்டணியில் வெளியாகும் படங்களை கண்டு ரசிகர்கள் மெய்சிலிப்பதுண்டு. அப்படி ஒரு கூட்டணி தான்  வாசுதேவ் மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி. இந்த கூட்டணியில் வெளியான  விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களும், அதன் பாடல்களும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளன.
 
இந்நிலையில் இந்த கூட்டணி அடுத்த படத்திற்காக இணைய உள்ளனர். மூவரும் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இது ஆக்சன் படமா, திரில்லர் படமா இல்லை ரொமண்டிக் படமாக என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.