செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 22 அக்டோபர் 2018 (15:47 IST)

நடிகை லேகா வாஷிங்டன் சிம்பு மீது 'மீ டு' புகார்

பிரபல பின்னணி பாடகி சின்மயி, 'மீடு'  இயக்கம் மூலம் டுவிட்டரில் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.


இந்த விவகாரம் தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  நடிகை லேகா வாஷிங்டன் நடிகர் சிம்பு மீது புகார் எழுப்பியுள்ளார்., 
 
ஜெயம் கொண்டான், கெட்டவன் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளவர் லேகா வாஷிங்டன். இவர் தனது டுவிட்டரில் 'ஒரே ஒரு வார்த்தை' 'கெட்டவன்'  என்று மீடு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்,
 
சிம்பு நடித்த கெட்டவன் படத்தில் லேகா வாஷிங்டன்  கதாநாயகியாக நடித்தார். இந்த படம் எதிர்பாராத சில காரணங்களால் பாதியில கைவிடப்பட்டது. லேகா வாஷிங்டன் சிம்பு மீது 'மீடு' பதிவு செய்திருப்பதை கண்டு சிம்பு ரசிகர்கள்  கொந்தளிப்பில் உள்ளனர்.

தெளிவான விளக்கம் அளிக்குமாறு லோகாவை வற்புறுத்தி வருகிறார்கள். எனவே விரைவில லோகா பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.