பிக்பாஸ் சீசன் -5 நிகழ்ச்சிக்கான பணிகள் தொடக்கம் !
தமிழகத்தில் மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமாக மாறியுள்ளது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்கான ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதன் முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடங்கப்பட்டது. இதை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
இதன் மூன்று சீசன்களும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் அல்லது ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு கொரொனா பரவல் காரணமாக தாமதம் ஆனது.
இந்நிலையில் இந்தாண்டு குறிப்பிட்ட தேதியில் தொடங்குவதற்காக ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. எனவே இந்த 5 வது சீசன் போட்டியில் யார் யார் போட்டியாளர்களாகக் கலந்து கொள்ளவுள்ளார்கள் என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.