திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 13 டிசம்பர் 2018 (21:57 IST)

தனுஷால் சென்னையில் பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் அதிகரிக்கும்: பாலாஜி மோகன்

தனுஷ் நடித்த 'மாரி 2' திரைப்படம் இம்மாதம் 21ஆம் தேதி பெரும் போட்டியுடன் வெளிவரவுள்ளது. ஐந்து படங்களில் ஒன்றாக வெளிவந்தாலும் இந்த படம் தான் அதிக எதிர்பார்ப்பில் உள்ள படம் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ள விளம்பரம் ஒன்றில், 'மாரி 2' திரைப்படம் வெளிவந்தவுடன் சென்னையில் பெண் ஓட்டுனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் கூறியதாவது:

மாரி 2' படத்தின் நாயகி சாய் பல்லவி ஆட்டோ ஓட்டும் அராத்து ஆனந்தி கேரக்டரில் நடித்துள்ளார். சென்னையில் சுமார் 76 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடினாலும், அதில் 400 பேர் மட்டுமே பெண் ஆட்டோ ஓட்டுனர்களாக இருந்து வருகின்றனர். ஆனால் 'மாரி2 திரைப்படம் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி  வரும் பெண்களை ஊக்கப்படுத்தியுள்ளதால் இந்த படம் வெளிவந்தவுடன் பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் எண்ணிக்கை உயரும் என நம்புகிறேன். மேலும் தமிழ் சினிமாவில்  நாயகி ஒருவர் ஆட்டோ டிரைவர் கேரக்டர் ஏற்று நடிப்பது இதுவே முதல் முறை என்றும்  பாலாஜி மோகன் கூறியுள்ளார்.

இவர் கூறியபடி சென்னையில் பெண் ஆட்டோ ஓட்டுனர்களின் எண்ணிகை அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்