திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (21:56 IST)

Hangover மாதிரியான படங்களில் நடிக்க ஆசை- ஹிருத்திக் ரோசன்

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோசன் Hangover  மாதிரியான படங்களில் நடிக்க ஆசையாக உள்ளாது என்று தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோசன். இவருக்கு  உலகம் முழுவதும் ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் அதிகளவில் உள்ளனர்.

இந்த நிலையில், சமீபத்தில் அவர்  அளித்த பேட்டியின் Hangover  மாதிரியான படங்களில் நடிக்க ஆசையாக உள்ளாது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:  நான் உண்மையில் காமெடியான படங்களில் நடிக்க விரும்புகிறேன். ஆனால், அதுமாதிரியான கதைகளை என்னிடம் யாரும் கூறுவதில்லை என்று தெரிவித்தார்.

மேலும், அமெரிக்க காமெடி படமான hangover போன்று 4-5 கேரக்டர்கள் கொண்ட படத்தில்  நடிக்க ஆசையாக இருக்கிறது. இப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் சீரியஸாக இருந்தாலும், இதைப் பார்க்கும் பார்வையாளர்கள் சிரிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.