1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 10 ஜனவரி 2024 (12:42 IST)

பிறந்தநாள் என்றாலே எனக்கு பயம் வருகிறது- நடிகர் யாஷ்

YASH
நடிகர் யாஷ் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பபட்ட  நிலையில் அவரது பிறந்தநாளுக்கு கட் அவுட் வைக்க முயன்ற மூன்று ரசிகர்கள் மின்சாரம் ஷாக் அடித்து பலியான நிலையில், ''நற்பணி செய்யுங்கள்…அதுவே போதும். தாய் தந்தையை  மதியுங்கள், பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் ‘’என்று யாஷ் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள  ஒரு பகுதியில் யாஷ் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு பிரம்மாண்டமான கட் அவுட் வைக்க அவரது ரசிகர்கள் முயன்றனர். மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

எனவே   நடிகர் யாஷ், அவர்களின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி,  குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

அப்போது பேசிய  யாஷ்,  ‘’எங்களை பற்றி யோசிக்காதீர்கள், ரசிகர்கள் யாரும் எனக்கு பேனர்கள் வைக்காதீர்கள். பைக்கில் என்னை பின் தொடராதீர்கள் ‘’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’ஒவ்வொரு ஆண்டும் பிறந்த நாளின்போது இத்தகைய அசம்பாவிதங்கள் நடப்பதை கண்டால் பிறந்தநாள் என்றாலே எனக்கு பயம் வருகிறது. அசம்பாவிதங்கள் நேர்ந்தால் குடும்பத்தினரின் கதி என்ன? யார் வேண்டுமானாலும் பண உதவி செய்வர். ஆனால், இறந்த மகன் மீண்டும் வருவாரா?  நற்பணி செய்யுங்கள்…அதுவே போதும். தாய் தந்தையை  மதியுங்கள், பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் ‘’என்று தெரிவித்துள்ளார்.