வலிமை டிரைலர் தாமதம் ஏன்… இதுதான் காரணமாம்!
வலிமை திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாக உள்ளது.
வலிமை திரைப்படத்துக்கு அஜித் ரசிகர்கள் இடையே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. அதை பூர்த்தி செய்யும் விதமாக சமீபத்தில் வெளியான மேக்கிங் வீடியோ இருந்தது. பொங்கலுக்கு படம் வெளியாக உள்ள நிலையில் இன்று மாலை 6.30 மணிக்கு டிரைலரை படக்குழு வெளியிடுகிறது.
சில நாட்களுக்கு முன்பாகவே வெளியாகி இருக்க வேண்டிய டிரைலரின் தாமதமான ரிலிஸுக்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. டிரைலரில் பயன்படுத்த படவேண்டிய சில கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் வெளிநாடுகளில் இருந்து வருவதற்கு தாமதமாகியுள்ளதாம். அதனால் தான் சில நாட்கள் தாமதத்துக்குப் பின்னர் இன்று ரிலிஸ் ஆகிறது.