இதுதான் அஜித்: வலிமை படக்குழுவினர் பெருமிதம்

valimai
இதுதான் அஜித்: வலிமை படக்குழுவினர் பெருமிதம்
Last Updated: வெள்ளி, 15 மே 2020 (20:13 IST)
ஊரடங்கு உத்தரவு காரணமாக திரைப்பட படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் தமிழக அரசு போஸ்ட் புரடொக்ஷன் பணிகளுக்கு மட்டும் ஒரு சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது
இதனை அடுத்து கமலஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’, விஜய்யின் ’மாஸ்டர்’ சிபிராஜின் ’கபடதாரி’ உள்பட பல திரைப்படங்களில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அஜித்தின் ’வலிமை’ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் மட்டும் தொடங்கப்படவில்லை.

இது குறித்து படக்குழுவினர் கூறியபோது ’கொரோனா வைரஸின் தாக்கம் முழுமையாக தமிழகத்தில் நீங்கும் வரை போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் செய்ய வேண்டாம் என்று அஜித் அறிவுரை கூறியதாகவும், இதனை ஏற்றுக்கொண்ட வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குனர் வினோத் ஆகியோர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தற்போது செய்யவில்லை என்றும் கூறியுள்ளனர்

கொரோனா வைரஸ் தாக்கம் உச்சத்தில் இருக்கும் இந்த நிலையில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் செய்தால் அந்த பணியை செய்யும் ஊழியர்களுக்கு ரிஸ்க் என்று அஜித் கூறியதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்ததோடு, படக்குழுவின் ஒவ்வொருவர் மீதும் அஜித் காட்டும் அக்கறை குறித்து படக்குழுவினர் கூறியபோது ’இதுதான் அஜித்’ என்று தெரிவித்தனர்


இதில் மேலும் படிக்கவும் :