திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : சனி, 2 மே 2020 (22:01 IST)

’தல ‘அஜித் பிறந்த நாளில் 2 கோடி டுவீட் பதிவுகள்... ஒரு புதிய சாதனை

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பர்  அஜித்குமார். நேற்று (மே மாதம் 1  ஆம் தேதி ) இவரது பிறந்தநாள் ஆகையால், அவரது ரசிகர்கள் அஜித்துக்கு வாழ்த்துகள் தெரிவித்து, டுவிட்டரில் ஹேஸ்டேக்கை தெறிக்கவிட்டனர்.

ஏற்கனவே, கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், தனது பிறந்தநாளின்போது, டிபி வெளியிட வேண்டாம் என அஜித் தரப்பில் தெரிவிக்கப்பட்டநிலையில்,  நேற்று பல்வேறு நட்சத்திரங்கள், பிரமுகர்கள் அஜித்துக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

மேலும், நேற்று டுவிட்டரில் அஜித் ரசிகர்கள் #HBDDearestThalaAJITH என்ற ஹேஸ்டேக்கை மட்டுமே முதன்மையாகப் பயன்படுத்த நினைத்தனர். ஆனால் மேலும் 8 ஹேஸ்டேக்குகள் உருவானது.

இதில் , #HBDDearestThalaAJITH என்ற ஹேஸ்டேக் மூலம் 90  லட்சன் டுவீட்டுகள் பதிவாகியுள்ளது. மற்ற ஹேஸ்டேக்குகள் மூலம் பல லட்சம் டுவீட்டுகள் பதிவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 1 கோடியே 94 லட்சம் டுவீட்டுகள் பதிவிடப்பட்டுள்ளதாகவும், அதற்குப் பிறகு பதிவிட்டுள்ளா டுவீட்டுகளைச் சேர்த்தால் 2 கோடி டுவீட்ட்கள் பதிவானதாகவும்,இதில்  ஒரு நடிகருக்காக அதிகம் பதிவிடப்பட்ட டுவீட்டுகளாக சாதனை படைத்துள்ளது என்ற தகவல் வெளியாகிறது.

அதனால் தல அஜித் ரசிகர்கள் இந்த குறித்த  மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர்.