அஜித் அனுப்பிய இமெயில்- தர்மசங்கடத்தில் போனி கபூர் மற்றும் ஹெச் வினோத்!

Last Modified வெள்ளி, 15 மே 2020 (15:50 IST)

வலிமைப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை கொரோனா அச்சம் முடிந்த பின்னரே தொடங்கவேண்டும் என அஜித் தயாரிப்பாளருக்கு மெயில் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தல அஜித் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் 'வலிமை'படத்தில் நடித்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே பணியாற்றுகிறார்கள். அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஹுமா குரேஷியும் போலீஸ் அதிகாரியாகவே நடித்து வருகிறார். இரட்டை வேடத்தில் நடிக்கும் அஜித் பைக் ரேஸராக மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் நிறைந்துள்ள வலிமை படம் வருகிற தீபாவளி தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்த படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் தமிழக அரசு போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை செய்யலாம் என அறிவித்திருந்த நிலையில் வலிமை படத்தின் வேலைகளையும் தொடங்கலாம் என தயாரிப்பாளர் போனி கபூரும், இயக்குனர் ஹெச் வினோத்தும் நினைத்திருக்க, அதற்கு அஜித் முட்டுக்கட்டைப் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக வலிமை படத்தின் பின் தயாரிப்பு பணிகள் கொரோனா பிரச்சனைகள் முடிந்து மீண்டும் இயல்புநிலை திரும்பிய பிறகுதான் தொடங்க வேண்டும் என தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குனர் வினோத் இருவருக்கும் அஜித் இமெயில் மூலமாக செய்தி அனுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :