திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 14 அக்டோபர் 2020 (07:45 IST)

சன்ரைசர்ஸ் அணிக்கு பயிற்சி அளிக்கும் முரளிதரன்: எந்த எதிர்ப்பும் இல்லையே ஏன்?

சன்ரைசர்ஸ் அணிக்கு பயிற்சி அளிக்கும் முரளிதரன்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ’800’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த திரைப்படம் முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்பதும் தெரிந்ததே 
 
இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்கக்கூடாது என ஈழத்தமிழர்கள் போர்க்கொடி எழுப்பி வருகின்றனர். லட்சக்கணக்கானோர் கொல்லப்படுவதற்கு காரணமான இலங்கை அரசின் ஆதரவாளர் முரளிதரன் என்பதால் இந்த எதிர்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் விஜய்சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒருவர் கூட தற்போது சன் ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளராக முரளிதரன் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மேலும் அந்த அணியில் உள்ள தமிழரான நடராஜனுக்கு பயிற்சி அளிக்கும் முரளிதரனுக்கு எந்த தமிழரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதேபோல் மும்பை அணிக்கு சிங்களரான மலிங்கா பயிற்சி அளித்து வருவதற்கும் ஒருவர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை 
 
ஆனால் முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்தால் மட்டும் எதிர்ப்பு ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. சினிமாக்காரர்களுக்கு எதிராக மட்டுமே தமிழர்கள் பொங்குவது ஏன் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.