திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 13 அக்டோபர் 2020 (20:01 IST)

விஜய்சேதுபதி நடிக்கும் முத்தையா முரளிதரனின் ’பயோபிக் பட ’’motion poster ’’வெளியீடு !

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் குறித்து உருவாகும் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியில் மிகசிறந்த பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் முத்தையா முரளிதரன். தமிழரான இவரது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து விஜய் சேதுபதி ”முரளிதரன் 800” என்ற படம் உருவாக்கப்பட உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள சூழலில் படத்தின் மோஷன் போஸ்டர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் மோஷன் போஸ்டரை நாளை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட உள்ளனர். இந்த நிகழ்ச்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் ஆகிய சேனல்களில் நாளை 6 மணிக்கு(இன்று )  நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது என கூறப்பட்ட நிலையில் தற்போது முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான 800 என்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.