வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 28 ஜூன் 2019 (23:03 IST)

அரை மணி நேரம் நடந்த பாத்திரம் துலக்கும் பஞ்சாயத்து: எரிச்சலில் பார்வையாளர்கள்

பிக்பாஸ் வீட்டில் இன்று பாத்திரம் துலக்கும் பிரச்சனை மட்டுமே போட்டியாளர்களிடையே சுமார் அரைமணி நேரம் நடந்ததால் அந்த நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த பார்வையாளர்கள் எரிச்சல் அடைந்தனர்
 
புதியதாக வீட்டிற்கு வந்த மீரா மிதுனை க்ளினிங் டீமில் சேர்க்க, அவரை இரவு பாத்திரம் துலக்கும்படி மதுமிதா கூறிவிட்டாராம். ஆனால் இரவில் அதிகம் பாத்திரம் இருக்கும் என்பதால் தன்னால் முடியாது என்று மீராமிதுன் கூற அதன்பின்னர் ஆரம்பித்த இந்த பிரச்சனை வனிதா, அபிராமி, சாக்சி, ரேஷ்மா என மாறி மாறி பேசியதையே திரும்ப திரும்ப பேசி எரிச்சலூட்டினர். 
 
இந்த சண்டை விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தபோது இதைப்பற்றி எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்தது லூஸ்லியா மட்டுமே. சாண்டியோ, 'நான் ஏற்கனவே சொன்னது மாதிரியே அமைதியா இருக்கும் இந்த குடும்பத்தில் இப்போது புயல் வீசிவிட்டது என்று கூறினார். மோகன் வைத்யா, தர்ஷன் ஆகியோர் இந்த சண்டையில் இருந்து விலகியிருந்தனர். சண்டை நடக்கும் இடத்தில் இருந்தாலும் சேரன் மட்டும் இந்த சண்டையை வெறுமனே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.
 
இந்த சண்டைக்கு பின் வனிதாவுக்கு ஒருசிலர் எதிர்ப்பும், மீராவுக்கு ஒருசிலர் ஆதரவு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது