"என் மனதை கொள்ளையடித்த லொஸ்லியா" - ஹரிஷ் கல்யாண் போட்ட ரொமான்டிக் ட்விட்!

Last Updated: வெள்ளி, 28 ஜூன் 2019 (19:08 IST)
பிக்பாஸ் மூன்றாவது சீசனில் இலங்கையைச் சேர்ந்த மாடல் அழகி லொஸ்லியா அங்கிருக்கும் செய்தி நிறுவனம் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியுள்ளார்.


 
இவர் முதல் சீசனில் ஓவியா இடத்தை இன்னும் கொஞ்சநாட்களில் தக்கவைத்து விடுவார்க் என ரசிகர்கள் கூறுகின்றனர். காரணம் பிக்பாஸில் நடக்கும் எந்த ஒரு பிரச்சனைக்கும் தலையிடாமல் யாருக்கும் எந்தவித தொல்லையும் கொடுக்காமல் அவர் பிக்பாஸில் அனைவரிடமும் எதார்த்தமாக பழகும் குணம் உள்ளவர் என்பதாலே பலரும் இவருக்கு ரசிகர்களாகிவிட்டனர். இவருக்கு ஆர்மி தான் சோசியல் மீடியாக்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. 
 
அந்த வகையில் தற்போது முதல் சீசனில் வைல்ட் கார்ட் போட்டியாளராக பங்கேற்று இளம் பெண்கள் மனதை கொள்ளைகொண்டு முன்றாவது இடத்தை பிடித்த ஹாரிஸ் கல்யாண் மனதை தற்போது லொஸ்லியா கவர்ந்துள்ளார்.
 
இந்நிலையில் இதை பற்றி ட்விட் செய்துள்ள ஹாரிஸ் கல்யாண்  தான்  நடித்த இஸ்பேட் ராஜா படத்திலிருந்து கண்ணம்மா பாடலை லொஸ்லியாவுக்கு டெடிகேட் செய்து அனைவர் மனதையும் கொள்ளையடித்துவிட்டார் என குறிப்பிட்டுள்ளார். 
 


இதில் மேலும் படிக்கவும் :