வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 28 ஜூன் 2019 (19:10 IST)

அந்த பொண்ணு என்ன சொல்ல போகுதோ! லாஸ்லியா குறித்து கஸ்தூரியின் டுவீட்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் லாஸ்லியா ஒருவர் தான் பார்வையாளர்களின் நன்மதிப்பை பெற்று வருகிறார். ஓவியா, ரித்விகா போன்று இவருக்கும் சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ஆர்மிக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒருவாரத்தில் இவரைபற்றி கூகுளில் தேடி பல விஷயங்களையும் புகைப்படங்களையும் டுவிட்டர் பயனாளிகள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில் ஒன்று லாஸ்லியா பள்ளியில் படிக்கும்போது எடுத்த புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக ஒரே அழுகாச்சியாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் லாஸ்லியா தனது சோகக்கதையை சொல்லவில்லை. அனேகமாக அவர் இன்று சொல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
 
இந்த நிலையில் லாஸ்லியா குறித்து நடிகை கஸ்தூரி டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் 'இப்போவே யாரு எவ்வளோ  சோக கதை சொன்னாலும் அழுவாச்சி வரலை... இதுக்கு மேலயும்  சோகத்தை பிழியணும்னு  அந்த ஸ்ரீலங்கா பொண்ணு யுத்தத்தை பத்தி எதையாவது சொல்லிறப்போவுதோன்னு திக்கு திக்குனு இருக்கு என்றும் குறிப்பிட்டுள்ளார். 
 
மேலும் 'எங்க பிளாட்ஸ்ல எல்லா வீட்டுலயும்  குழந்தைகளாம் பாக்குறாங்க.... குழந்தைங்க பாக்குற நிகழ்ச்சியா இது? பெற்றோர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவும் என்றும் 'இதே சேனல்ல  "கதையல்ல.. னு" சொல்லி ஒரு நிகழ்ச்சி.... வந்தவங்களை அமுக்கி பிடிச்சு கட்டாயமா  அழவைப்பாங்க...  அதுல ஆரமிச்சது... எல்லா ப்ரோக்ராம்லயும் அழுவாச்சி பிளாஷ்பேக் என்றும், போதும்பா விட்ருங்கப்பா... இன்னும் எத்தினி நாளுக்கு சென்டிமென்டை  பிழியபோறீங்க' என்றும் கஸ்தூரி டுவீட்டுக்களை பதிவு செய்துள்ளார்.