செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 20 பிப்ரவரி 2021 (23:01 IST)

மனிதருக்குள் என்ன, உயர்வு தாழ்வா? - நடிகர் கமல்ஹாசன் டுவீட்

மனிதருக்குள் என்ன, உயர்வு தாழ்வா? அதைக் கற்பித்து வாழ்வதுவும் மனித வாழ்வா?  என நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தமிழகம் முழுவதும் திமுக,அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபடுள்ளனர். இந்நிலையில் இம்மாத இறுதியில் சட்டமன்றத்  தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.

எப்போதும் போலவே திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளிடையே கடுமையான விமர்சனங்கள் நாள்தோறும் வெளியாகிறது

இந்நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், மனிதருக்குள் என்ன, உயர்வு தாழ்வா? அதைக் கற்பித்து வாழ்வதுவும் மனித வாழ்வா? சமூக நீதி நாள் இன்று உலகத்துக்கு. அக்குணமே உயிர்மூச்சு மய்யத்துக்கு. அனைவரும் சமமென்னும் பொன்னுலகம் நாம் படைப்போம் என பதிவிட்டுள்ளார்.