நடிகர் விஷ்ணு விஷாலுடன் இணைந்த மலையாள நடிகர்
தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவர் விஷ்ணுவிஷால். இவரது நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் காடன். ஜகஜால கில்லாடி. எஃபைஆர் ஆகிய படங்கள் திரையங்கில் வெளியிட தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில், அடுத்து விஷ்னு விஷால் நடிக்கவுள்ள படம் மோகன் தாஸ். இப்படத்தை முரளி கார்த்திக் இயக்குகவுள்ளார். இவர் ஏற்கனவே களவு என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை நடிகர் விஷ்ணு விஷால் தயாரிக்கவுள்ளதாகத் தெரிகிறது.
மேலும், இப்படத்தின் முதற்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வரும்நிலையில், இப்படத்தில் புதிதாக மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் இணைந்துள்ளார். இதனால் படக்குழு மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.