செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 1 நவம்பர் 2021 (19:06 IST)

புனித் ராஜ்குமாரின் கண்களால் 4 பேருக்கு பார்வை

கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார். இவர் சமீபத்தில் மாரடைப்பால் காலமானார்.

அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்கள், கல்வியாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

புனித் ராஜ்குமார் இறந்த சில மணிநேரங்களில் அவரது கண்கள் தானம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில்  நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு 4 பேருக்கு கண்பார்வை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நாராயணா நேத்ராலயா மருத்துவமனையில்  இந்த அறுவைச் சிகிச்சை இலவசமாக நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.