விட்டு சென்ற புனித்... உதவிக்கரம் நீட்டிய விஷால்!
புனித் ராஜ்குமார் உதவியில் படிக்கும் 1800 மாணவர்களின் கல்விச் செலவை நடிகர் விஷால் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
விஷால் மற்றும் ஆர்யா நடித்துள்ள எனிமி படம் வருகிற நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளிக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. எனவே இந்த படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அப்போது ஐதராபாத் புரமோஷன் நிகழ்ச்சியின் போது மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் குறித்து பேசினார்.
அப்போது புனித் ராஜ்குமார் உதவியில் படிக்கும் 1800 மாணவர்களின் கல்விச் செலவை அடுத்தாண்டு முதல் நான் ஏற்க உள்ளதாக அறிவித்தார். பின்னர் புனித் ராஜ்குமார் புகைப்படத்துக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் 45 இலவசப் பள்ளிகள், 26 ஆதரவற்றோர் இல்லங்கள், 19 கோசாலை மற்றும் 16 முதியோர் இல்லங்கள் ஆகியவற்றை நடத்தி வந்திருந்துள்ளார். மேலும் 1800 மாணவர்களின் கல்விச் செலவையும் ஏற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.