ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (08:29 IST)

அரசு மரியாதையுடன் புனித் ராஜ்குமார் உடல் நல்லடக்கம்! – பிரபலங்கள் அஞ்சலி!

கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் இன்று பெங்களூரு கண்டீரவா ஸ்டுடியோவில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

கன்னடத்தில் புகழ்பெற்ற நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். நேற்று முன்தினம் புனித் ராஜ்குமார் திடீரென மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கண்டீரவா மைதானத்திற்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு பொதுமக்கள், திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் புனித் ராஜ்குமாரின் உடல் பெங்களூரு கண்டீரவா ஸ்டுடியோவில் அவரது தாய், தந்தையர் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே புதைக்கப்பட உள்ளது.