கல்யாண கச்சேரியில் பாடிய விக்ரம்
தன் மகளின் திருமண வரவேற்பு கச்சேரியில் பாடல் பாடி அசத்தியுள்ளார் விக்ரம்.
நடிகர் விக்ரம் மகளான அக்ஷிதாவிற்கும், கலைஞர் கருணாநிதியின் கொள்ளுப்பேரனான மனோரஞ்சித்துக்கும் சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் திருமணத்தை நடத்தி வைத்தார் கலைஞர்.
இந்நிலையில், இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி, புதுச்சேரி அருகேயுள்ள பட்டானூரில் அமைந்திருக்கும் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் எனப் பலர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், பாட்டு கச்சேரி நடைபெற்றது. அதில், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ‘ஓ பட்டர்பிளை...’ பாடலைப் பாடி அசத்தினார் விக்ரம்.