ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 30 அக்டோபர் 2017 (15:38 IST)

தல-தலைவர் ரசிகர்களாக நடிக்கும் விக்ரம்பிரபு-நிக்கிகல்ராணி

கோலிவுட் திரையுலகில் இளளயதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய விக்ரம்பிரபு தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் 'பக்கா'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகன், நாயகி தல, தலைவர் ரசிகர்களாக நடித்துள்ளனர்.



 


ஆம், கிரிக்கெட்டின் தல என்று அழைக்கப்படும் தோனியின் ரசிகராக விக்ரம் பிரபுவும், அவருக்கு ஜோடியாக நடிக்கும் நிக்கி கல்ராணி, சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகராகவும் 'பக்கா' படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.



 


மேலும் இந்த படத்தில் இன்னொரு நாயகியாக பிக்பாஸ் பிரபலம் பிந்துமாதவி நடித்துள்ளார். மேலும் சூரி, ஆனந்தராஜ், சதீஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை எஸ்.எஸ்.சூர்யா இயக்கி வருகிறார். சி.சத்யா இசையில் சரவணன் ஒளிப்பதிவில், சசிகுமார் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை டி.சிவகுமார் தயாரித்து வருகிறார்.