1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : திங்கள், 30 அக்டோபர் 2017 (12:15 IST)

கொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்தார் கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது கொள்ளுப்பேரன் மனோரஞ்சித் மற்றும் விக்ரம் மகள் அக்ஷிதா திருமணத்தை தனது கோபாலபுரம் வீட்டில் நடத்தி வைத்தார்.


 
 
சமீபத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கொள்ளுப்பேரனும், மு.க.முத்து-சிவகாமசுந்தரியின் மகள் வழிப்பேரனும், கெவின்கேர் நிறுவன தலைவர் சி.கே.ரங்கநாதன் மகனுமான மனோரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
 
இந்த நிலையில் இன்று சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டில் சற்றுமுன்னர் மனோரஞ்சித்-அக்ஷிதா திருமணத்தை கருணாநிதி நடத்தி வைத்தார். இந்த திருமணத்தில் திமுக பிரபலங்கள் மற்றும் விக்ரமின் உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
 
திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலமின்றி இருந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி முரசொலி அலுவலகம் சென்றார். அதனையடுத்து இன்று திருமணத்தையும் நடத்தி வைத்துள்ளார். வெகுவிரைவில் பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது சிம்மக்குரலில் கர்ஜிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.