திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 20 நவம்பர் 2018 (10:53 IST)

விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை படத்தின் ஆடியோ நாளை ரிலீஸ்

கலைப்புலி எஸ்.தாணுவின் வி.கிரியேசன் தயாரிப்பில் தினேஷ் செல்வராஜ் இயக்கியுள்ள படம் துப்பாக்கி முனை. இதில் விக்ரம் பிரபு எண்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

அவர் சந்திக்கும் ஒரு வழக்கு, அவரது வாழ்க்கையையே புரட்டி போடுகிறது. மிக விறுவிறுப்பாக துப்பாக்கி முனை படம் உருவாக்கப்பட்டிருப்பது டீசரிலேயேதெரிகிறது.
 
இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘துப்பாக்கி முனை’  படத்துக்கு தணிக்கை குழுவினர் யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். எஸ்.வி.முத்துகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். நாளை   துப்பாக்கி முனை படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெறு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.