திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : ஞாயிறு, 28 அக்டோபர் 2018 (13:37 IST)

விக்ரம் பிரபு நடித்துள்ள 'துப்பாக்கி முனை' குறித்து முக்கிய அறிவிப்பு

விக்ரம் பிரபு நடித்துள்ள 'துப்பாக்கி முனை' குறித்து முக்கிய அறிவிப்பு

‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படத்தை இயக்கியவர் தினேஷ்செல்வராஜ். இவரது இயக்கத்தில் விக்ரம் பிரபு - ஹன்சிகா நடிப்பில் உருவாகிஇருக்கும் படம் `துப்பாக்கி முனை’.சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் தணிக்கைக் குழுவில் துப்பாக்கி முனை  படத்திற்கு யு சான்றிதழ்
கிடைத்துள்ளதால் படக்குழுவினர் உற்சாகமாக உள்ளனர்.கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படத்தில் விக்ரம் பிரபு கம்பீரமானபோலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெ‌ஷலிஸ்டாகவும் வலம் வருகிறார்.
 
மிகவும் முக்கியமான வழக்கு குறித்து விசாரிக்கும்  விக்ரம் பிரபு சந்திக்கும்மாற்றம் மற்றும் பிரச்சினைகளே படத்தின்  கதையாக  அமைக்கப்பட்டுள்ளது.வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு எல்.வி.முத்துகணேஷ் இசையமைத்திருக்கிறார்.