திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 9 அக்டோபர் 2018 (22:44 IST)

எனக்கும் பாலியல் தொல்லை நடந்துருக்கு: பிக்பாஸ் விஜயலட்சுமி

பெண்கள் மீதான பாலியல் வன்முறை என்பது உலகம் முழுவதும் நடந்து வரும் விஷயமாக உள்ளது. இதனை வெறும் சட்டத்தினால் மட்டும் தடுத்திர முடியாது. தனி மனித ஒழுக்கம் ஒன்றே இதற்கு நிரந்தர தீர்வாக இருக்க முடியும்

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெண்கள் குறிப்பாக நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளியே கூறி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பேட்டி அளித்த பிக்பாஸ் புகழ் நடிகை விஜயலட்சுமி தனக்கும் சிறுவயதில் பாலியல் தொல்லை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். சிறுவயதில் கராத்தே வகுப்பு சென்றபோது தன்னிடம் ஒரு மாஸ்டர் தவறாக நடக்க முயன்றதாகவும், வீட்டிற்கு வந்தவுடன் தனது தந்தையிடம் இதுகுறித்து புகார் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் திரையுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது குறித்த கேள்விக்கு பதில் கூறிய விஜயலட்சுமி, 'போட்டிகள் நிறைந்த திரையுலகில் வாய்ப்புகளை பெற ஒருசில பெண்கள் படுக்கைக்கு வர சம்மதிப்பதாகவும், இவ்வாறான பெண்களை தவிர்த்து விருப்பம் இல்லாத பெண்களை தொந்தரவு செய்யாமல் இருப்பதே நல்லது என்றும், இந்த தவறுக்கு இரு தரப்பிலும் தவறு இருப்பதாகவும் தெரிவித்தார்.