திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 8 அக்டோபர் 2018 (17:47 IST)

யார் அவள்? அழித்து விடுவேன் - சோனம் கபூரை விளாசிய கங்கனா ரனாவத்

தன்னை பற்றி தவறாக விமர்சித்த பாலிவுட் நடிகை சோனம் கபூரை ரங்கனா ரனாவத் கடுமையாக எச்சரித்துள்ளார்.

 
தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இயக்குனர் விகாஸ் பாஹல் மீது சமீபத்தில் பாலியல் புகார் கூறியிருந்தார்.
 
கடந்த 2014ம் ஆண்டு விகாசுக்கு திருமணம் நடந்திருந்தபொழுதும், குயின் படப்பிடிப்பு நடந்தபொழுது ஒவ்வொரு நாளும் விகாஸ் ஒரு புதிய பெண்ணுடன் பாலியல் உறவில் ஈடுபடுவார். ஒவ்வொரு இரவும் விருந்து நடக்கும். நான் படப்பிடிப்பு முடிந்து ஓய்வு எடுக்க செல்வேன். ஆனால் என்னை தூங்க விடாமல் அவர் தொந்தரவு செய்தார். எனது கழுத்தில் அவரது முகத்தினை புதைத்து கொள்வார். என்னை இறுக கட்டி கொள்வார். பின்னர் எனது முடியை முகர்ந்திடுவார். அவரிடம் இருந்து என்னை விடுவித்து கொள்ள அதிக வலிமையுடன் நான் போராட வேண்டியிருந்தது என அவர் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், இதுபற்றி ஒரு விழாவில் பேசிய நடிகை சோனம் கபூர் “ பாலியல் புகார் பற்றி தைரியாமாக கங்கனா ரனாவத் பேசியதை வரவேற்கிறேன். ஆனால், சில சமயங்களில் அவரை நம்ப முடியாது” என தெரிவித்திருந்தார்.
 
இதனால் கோபமடைந்த கங்கனா ரனாவத் “என்னை பற்றி விமர்சிக்க அவர் யார்? அவரப் போல நான் அப்பாவின் தயவில் சினிமாவிற்கு வரவில்லை. 10 வருடங்கள் உழைத்து இந்த நிலையை அடைந்துள்ளேன். அவர் ஒன்றும் சிறந்த நடிகை இல்லை. பல சர்வதேச மாநாடுகளில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு நான் கலந்து கொண்டு பேசியுள்ளேன். என்னை பற்றி அவர் பேசக்கூடாது. மீறினால் அழித்துவிடுவேன்” என ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.