வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 8 அக்டோபர் 2018 (19:19 IST)

போங்கப்பா...உங்க சங்காதமே வேணாம்! பொசுக்குன்னு கோபப்பட்டு வெளியேறிய சோனம் அகுஜா

டுவிட்டரில் நடிகர், நடிகைகள், திரையுலக நட்சத்திரங்கள் ஏதேனும் கருத்துக்களை பதிவிட்டால் அதற்கு பதிலடியாக ரசிகர்கள் கருத்து பதிவிடுவது சகஜமான ஒன்று. அதிலும் சமூக பிரச்சினை தொடர்பான கருத்துக்களை யாரேனும் பதிவிட்டால் அவர்களுடன் ரசிகர்கள் சண்டை இடுவது ரொம்பவே சாதாரணமாக இருக்கிறது. அப்படி ஒரு சண்டை தான் பாலிவுட்டிலும் நடந்துள்ளது.

 
பிரபல பாலிவுட் நடிகை சோனம் அகுஜா, சல்மான்கானுடன் ஜோயா பேக்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் தனது டுவிட்டரில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் "வீட்டை விட்டு வெளியில் வரவே அச்சமாக இருக்கிறது. ஷுட்டிங் போற இடத்திற்கு காரில் செல்ல 2 மணி நேரமாகுது. ரோடு சரியில்லை, சுற்றுப்புறசூழல் சரியில்லை" என்று புலம்பி இருந்தார். இதற்கு பதில் அளித்த ஒரு ரசிகர் "ஒரு லிட்டருக்கு 5 கிலோ மீட்டர் ஓடும் சொகுசு கார், வீட்டுக்கு பத்து ஏசி பயன்படுத்தும் உங்களை போன்ற ஆடம்பர வாசிகளால்தான் அத்தனை பிரச்சினையும் ஏற்படுகிறது" என்று கூறியிருந்தார். அதுமட்டுமில்லாது, இயக்குனர் விகாஷ் மீது பாலியல் புகார் கூறிய கங்கனா ரனாவத் பற்றி அவர் தெரிவித்த கருத்திற்கும் நெட்டிசன்கள் கடுமையான கருத்துகளை தெரிவித்தனர்.
 
இதில் கோபம் அடைந்த சோனம் டுவிட்டரை விட்டு வெளியேறி விட்டார் இது குறித்து அவர் "இனி சிறிது காலத்திற்கு ரசிகர்களுடன் உரையாட மாட்டேன். டுவிட்டர் மிக எதிர்மறையாக உள்ளது. அனைவருக்கும் அமைதியும், அன்பும் ஏற்படட்டும்" என  சோனம் தெரிவித்துள்ளார்