1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 7 அக்டோபர் 2018 (15:47 IST)

நீ செம ஃபிகர்.. லவ் யூ- சின்மயிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரசாந்த்?

பிரபல யூடியூப் சினிமா விமர்சகர் பிரசாந்த் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதற்கான ஆதாரங்களை பின்னணி பாடகி சின்மயி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 
பாலியல் தொல்லை குறித்தும், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் குறித்தும் சின்மயி தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் பேசி வருகிறார். 
 
இந்நிலையில், பிரபல யூடியூப் சினிமா விமர்சகர் பிரசாந்த் தன்னுடன் அநாகரீகமாக நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். தனக்கு ஆதரவு தருவதாக கூறி தவறாக பேசினார் எனவும் கூறியுள்ளார். அதை நிரூபிக்கும் வகையில் அவருடன் நடந்த வாட்ஸ்-அப் உரையாடல்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
 
மேலும், மற்றொரு பெண்ணிடமும் அவர் இப்படி நடந்து கொண்டார் எனக்கூறி, அந்த பெண்ணின் பெயரை வெளியிடாமல், அவரிடம் பிரசாந்த் நடத்திய உரையாடல்களையும் அவர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 
அதில், லவ்யூ.. ஸ்வீட் ஹார்ட்.. நீ செம பிகர்.. என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. ஆனால், அது உண்மையில்லை எனக்கூறும் பிரசாந்த், சின்மயி பற்றி சுசித்ரா வெளியிட்ட தகவல்களுக்கு சின்மயின் பதில் எதுவோ, இந்த விஷயத்தில் என் பதிலும் அதுவே என பதிவிட்டுள்ளார்.
 
இதனால், கோபமடைந்த சுசித்ரா, சுசித்ராவிற்கு ஏற்பட்டது மனக்கோளாறு. அதோடு உங்களை ஒப்பிடாதீர்கள் என காட்டமாக பதிலளித்துள்ளார்.  அதேபோல், நான் தவறாக பேசியிருந்தால் காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள் என பிரசாந்த் கூறி வருகிறார்.
 
இதைத் தொடர்ந்து பலரும் பிரசாந்துக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.