வருகிறது ஊமைவிழிகள் 2 … ஏ ஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படுகிறார் விஜயகாந்த்?
கடந்த 1986ஆம் ஆண்டு ஆபாவாணன் தயாரிப்பில் ஆர்.அரவிந்தராஜ் இயக்கத்தில் விஜயகாந்த், கார்த்திக், அருண்பாண்டியன் சந்திரசேகர், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் நடிப்பில் ஒரு த்ரில்லர் படம் உருவாகியது. பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் சேர்ந்து உருவாக்கிய இந்த படம் தமிழின் மிகச்சிறந்த த்ரில்லர் படமாக கொண்டாடப்பட்டது
இந்த படத்துக்குப் பிறகுதான் தமிழ் சினிமாவில் பிலிம் இன்ஸ்ட்யூட்யூட் மாணவர்களுக்கு இயக்கம் மற்றும் பல துறைகளில் வாய்ப்புகள் அதிகளவில் கிடைக்க ஆரம்பித்தன. அதிலும் பல படங்களில் விஜயகாந்த் வரிசையாக பல படங்களில் நடித்து பிலிம் இன்ஸ்டியூட் மாணவர்களின் ஆஸ்தான கதாநாயகனாக வலம் வந்தார்.
சமீபத்தில் அவர் மறைந்ததை அடுத்து ஆபாவாணன் சென்னை திரைப்படக் கல்லூரியில் நடந்த விஜயகாந்த் நினைவு நிகழ்ச்சியில் பேசும்போது “ஊமை விழிகள் இரண்டாம் பாகத்தை விஜயகாந்தை ஏ ஐ தொழில்நுட்பத்தில் உருவாக்க உள்ளதாக” பேசியுள்ளாராம். இது விஜயகாந்த் ரசிகர்களுக்கு ஒரு இன்ப மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.