1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 31 டிசம்பர் 2023 (08:08 IST)

கோயம்பேடு வளைவு சந்திப்பு சாலைக்கு விஜயகாந்த் பெயர்: முதல்வர் அறிவிப்பு

vijayakanth
கோயம்பேடு வளைவு சந்திப்பு சாலைக்கு விஜயகாந்த் சதுக்கம் என்ற பெயர் வைக்கப்படும் என தமிழக  முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
 
  கோயம்பேடு வளைவு சந்திப்பு சாலைக்கு விஜயகாந்த் பெயர் வைக்க வேண்டுமென தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோளை ஏற்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அந்த சாலைக்கு விஜயகாந்த் சதுக்கம் என்ற பெயர் வைக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 
 
சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த் இறந்தபோது கோயம்பேடு வளைவு சந்திப்பு சாலைக்கு விஜயகாந்த் பெயர் வைக்க வேண்டும் என்றும் அதேபோல் நடிகர் சங்க கட்டிடத்திற்கும் விஜயகாந்த் பெயர் வைக்க வேண்டும் என்றும் பிரேமலதா தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. 
 
அந்த கோரிக்கைகளில் தற்போது ஒரு கோரிக்கை நிறைவேறி உள்ள நிலையில், இன்னொரு கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Siva