செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 28 டிசம்பர் 2023 (12:02 IST)

விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்படுவது எங்கே? குடும்பத்தினர் அறிவிப்பு..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை காலமான நிலையில் அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்படும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்வர் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய போது விஜயகாந்த் உடலை போது இடத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பிரேமலதா வேண்டுகோள் விடுத்தார். 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி விஜயகாந்த் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்படும் என்று குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். 
 
நாளை மாலை 4.45 மணிக்கு சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில்  விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் வைக்கப்படும் என்றும் பொதுமக்கள் அமைதியாக மரியாதை செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva