திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 ஜனவரி 2025 (14:30 IST)

கமெண்டில் வந்து கண்டமேனிக்கு பேசிய நபர்கள்! புயலாய் மாறிய நடிகை ஹனிரோஸ்! - 27 பேர் மீது வழக்கு!

நடிகை ஹனிரோஸின் புகைப்படத்திற்கு அவதூறான கமெண்ட் செய்த 27 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ஹனி ரோஸ். பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி, மோகன்லாலின் மான்ஸ்டர் என பல படங்களில் நடித்துள்ள இவர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.

 

இந்நிலையில் சமீபத்தில் சமூக வலைதளத்தில் ஹனிரோஸ் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்துள்ளார். அதற்கு சிலர் மோசமான சில கமெண்டுகளை இட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த ஹனிரோஸ் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

அதன்படி நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் ஹனிரோஸ் பதிவில் ஆபாசமாக பேசியதாக 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K