இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?
இசையமைப்பாளர், இயக்குனர் மற்றும் வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன், திடீரென உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
தமிழ் திரை உலகின் இசையமைப்பாளர், இயக்குனர், பாடல் ஆசிரியர் என பல்வேறு துறைகளில் ஈடுபட்டிருந்த கங்கை அமரன், மானாமதுரையில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்றதாகவும், அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, உடனடியாக அவர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி பெற்று, அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக கூறப்படுகிறது.
கங்கை அமரன் உடல் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி தெரிந்ததும், ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Edited by Siva