தொடர்புடைய செய்திகள்
- விஜயகாந்தின் உடலை பார்த்து கதறி அழுத பிரேமலதா.. சாலிகிராமம் இல்லத்தில் உடல்..!
- விஜயகாந்த் மறைவு: முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரங்கல்.
- திருமங்கலம் விஜயராஜ் கேப்டன் விஜயகாந்த் ஆனது எப்படி? – விஜயகாந்த் வரலாறு!
- சினிமா உலகில் மனிதநேயத்துக்கு நீங்கள் தான் குரு… இயக்குனர் சிம்புதேவன் நெகிழ்ச்சி!
- விஜயகாந்த் அஞ்சலி நிகழ்வுக்கு அரசு மரியாதை வழங்கப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
முதல்வர் நேரில் அஞ்சலி.. பொது இடத்தில் அடக்கம் செய்ய முதல்வரிடம் பிரேமலதா கோரிக்கை..!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலமான நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது பொது இடத்தில் விஜயகாந்த் உடலை அடக்கம் செய்ய முதல்வரிடம் விஜயகாந்த் மனைவி பிரேமலதா கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று காலை காலமான விஜயகாந்தின் உடல் அவரது சாலிகிராமம் இல்லத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் பிரபலங்கள் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிறிது நேரத்தில் அவரது உடல் தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சற்று முன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது பிரேமலதா விஜயகாந்த் அவரிடம் விஜயகாந்த் உடலை பொது இடத்தில் அடக்கம் செய்ய கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. முதல்வர் என்ன முடிவு எடுப்பார் என்பது குறித்து தகவல் இன்னும் சில நிமிடங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
