ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 12 செப்டம்பர் 2024 (12:20 IST)

சீனு ராமசாமி பதட்டப்பட்டு நான் பார்த்ததேயில்லை- விஜய் சேதுபதி பாராட்டு!

தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை மற்றும் மாமனிதன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ள சீனு ராமசாமி, ஜி வி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி   ‘இடிமுழக்கம்’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.  இந்த அந்த படம் ரிலீஸாகவில்லை. இதையடுத்து அவர் புதுமுக நடிகர் ஏகன் நடிக்கும் ‘கோழிப்பன்னை செல்லதுரை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரிகிடா சஹா கதாநாயகியாக நடிக்க யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் சார்பாக டி.அருளானந்த், மேத்யூ அருளானந்த் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்துக்கு ரகுநந்தன் இசையமைக்க, வைரமுத்து, பா விஜய் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் பாடல்களை எழுதுகின்றனர். செப்டம்பர் 20 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி கலந்துகொண்டார். அப்போது பேசுகையில் “இந்த படத்தின் ஹீரோ ஏகனைப் பார்க்கும்போது கடந்தகாலமும் நிகழ்காலமும் ஒன்றாக நிற்பது போல உள்ளது. இந்த பையனுக்கு 21 வயதுதான் ஆகிறது. எவ்வளவு தெளிவாகப் பேசுகிறான். நானெல்லாம் இருட்டில் தடுமாறிக் கொண்டிருந்தேன். சீனு ராமசாமி சாரோடு நான் நான்கு படங்கள் வேலை செய்துள்ளேன். அவர் ஒருநாள் கூட இன்னைக்கு என்ன எடுக்க வேண்டும்? எப்படி ஷாட் வைக்க வேண்டும் என பதற்றப்பட்டதே இல்லை. அவ்வளவு தெளிவாகக் கொடுத்த பட்ஜெட்டுக்குள் படத்தை முடிப்பார்” எனப் பாராட்டியுள்ளார்.