வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 12 செப்டம்பர் 2024 (08:32 IST)

96 படத்தில் என்னைத் தவிர யார் நடித்தால் நன்றாக இருக்கும்… விஜய் சேதுபதியின் கேள்விக்குப் பிரேம்குமாரின் பதில்!

96 படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் பிரேம்குமார், அதன் பிறகு அந்த படத்தை ஜானு என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்தார். ஆனால் அந்த படம் ஒரு தோல்விப் படமாக அமைந்தது. அதையடுத்து மிகப்பெரிய இடைவெளிக்குப் பின்னர் தற்போது கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் ‘மெய்யழகன்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். 

படத்தில் மற்ற முக்கிய வேடங்களில் ராஜ்கிரண் மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படம் செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் 96 படத்தின் ஷூட்டிங்கின் போது நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “ஷூட்டிங்கின் போது விஜய் சேதுபதி என்னிடம் என்னைத் தவிர இந்த படத்தில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் எனக் கேட்டார். நான் அதற்கு கார்த்தி என்றேன். அதைக் கேட்டதும் அவர், “கரெக்ட், நாங்க ரெண்டு பேர்தான் இந்த கதாபாத்திரத்துக்கு சரியாக இருப்போம்” எனக் கூறினார்” எனப் பகிர்ந்துள்ளார்.